சென்னையில் நாளை ரயில் சேவை நிறுத்தம்!! பயணிகள் ஏமாற வேண்டாம்!!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நாளை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை நிறுத்தப்பட உள்ளது.
அதேப்போல், வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை காலை 8.10 மணி முதல் பிற்பகல் 1.50 மணி வரையிலும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி முடிந்த பின்னர் பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
அதே போல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பிற்பகல் 2.10 மணிக்கு ரயில் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்காமல் மாற்று வழியை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.