சீர்வரிசையில் கவனத்தை ஈர்த்த தக்காளி..!! அசத்திய பெண் வீட்டார்..!!
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை தற்போது அதிகரித்து வந்துள்ளதை தொடர்ந்து மக்கள் தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திக் கொண்டார்கள் என்றே கூறலாம். பருவ மழை காலத்தால் வரத்து குறைந்து நஷ்டம் ஏற்பட்டதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை 131 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்து வந்த தற்போது 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத சீராக பெண்ணுக்கு தக்காளியை கொடுத்துள்ளனர்.
திருமணமான முதல் ஆடியில் ஆடி சீர் செய்வது பெண் வீட்டில் வழக்கம். இதனால் ஆடி பிறப்பதை முன்னிட்டு பெண்ணின் பெற்றோர் 25 வகையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர்.
இதில் தேங்காய், ஆப்பிள், அண்ணாச்சி, மாம்பழம் போன்ற பழங்களோடு தற்போது பெரிதாக பேசவட்டும் வரும் பொருள் தக்காளியையும் வைத்து பெண்ணிற்கு கொடுத்துள்ளார். அத்தனை தட்டு மத்தியிலும் தக்காளி தட்டு தான் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.