பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?


Todays petrol,diesel rate

சென்னையில் தொடர்ந்து 23வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் , டீசல் விலை மாற்றம் என்ற முறையில் மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 10 காசுகள், 12 காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே வந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

petrol

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.