நாமக்கல்: தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் முட்டையின் விலை... இன்றைய விலை நிலவரங்கள்...

நாமக்கல்: தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் முட்டையின் விலை... இன்றைய விலை நிலவரங்கள்...



Today's egg rates

தற்போது  மீன்கள் இனப்பெருக்கம் காலம் என்பதால் ஆழ்கடலில் விசை படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மீன் வரத்து குறைந்துள்ளது. மீன்பிரியர்களுக்கு மாற்றாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. 

மேலும் முட்டையின் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ரூ 4.50 இருந்த முட்டையின் விலையில் இன்று 25 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள் முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

Egg rates

கடந்த 12 ஆம் தேதி முட்டை விலை ரூ3.65 ஆக இருந்தது. இந்த 8 நாட்களில் முட்டை விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில முக்கிய நகரங்களில் முட்டையின் விலை சென்னை 4.90, பர்வாலா 4.22, பெங்களூர் 4.70, டெல்லி 4.48, ஹைதராபாத் 4.55, மும்பை 5.10, மைசூர் 4.85, விஜயவாடா 4.65, ஹெஸ்பேட் 4.30, கொல்கத்தா 5.35.