குட் நியூஸ்: 20 பொருட்கள்... தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்...

குட் நியூஸ்: 20 பொருட்கள்... தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்...


Today start to give a pongal gift package

தமிழகத்தில் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் சேர்த்து மொத்தம் 20 பொருட்கள் வழங்கப்படுகிறது.

pongal gift

மேலும் டோக்கன் முறையில் மொத்தம்  2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.