BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
2 நாட்களாக மாற்றம் இல்லாத தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. வெள்ளியின் விலை மட்டும் கிலோ ரூ.1000 உயர்ந்து, ரூ.1,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: உயர் மின்னழுத்த கம்பி மீது கைபட்டு சோகம்; பெயிண்டர் பரிதாப பலி.!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.7215 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த ஓராண்டில் கணவர் வீட்டில் சடலமாக பெண்.. "பத்துப் பாத்திரம் தேய்த்து மகளை கவனித்தேனே" - தாய் குமுறல்.!