தமிழகம்

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Summary:

today and tomorrow heavy rain in tamilnadu

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாகவும், வங்கக்கடலில் அவ்வப்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகே வந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிட்டது. இந்த மேலடுக்கு சுழற்சியால் தான் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்ததாகவும், மேலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னைக்கு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மற்றும் வேலூர் ஆகிய 14 மாவட்டங்களில் செப்டம்பர் 21(இன்றும்), செப்டம்பர் 22(நாளையும்)கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement