TNPSC Group 4 Result 2018: அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்

TNPSC Group 4 Result 2018: அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்



TNPSC Group 4 Result 2018

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதனைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்கள் .

இந்த சந்திப்பில்,  வேலை வாய்ப்புக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது என்றும், www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன என்றும் கூறினார்.

மேலும், “பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை, 17 லட்சம் பேர் எழுதினர். இதில் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் தற்போது உள்ளது. இதில் 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம். தேர்வானவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் தங்களின் சான்றிதழ்களை இணையத்தத்தில் இ- சேவை மையத்தின் மூலம் பதிவு செய்தால் சென்னை வருவதை தவிர்க்கலாம்.

சான்றிதழ் பதிவேற்றங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அதன் பிறகு சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி தொடங்கும், பின்னர் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்” என்று கூறினார்.