
TNPSc group 4 issue
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் பல்வேறுபிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு, தேர்வர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 16 லட்சத்து 865 பேர் எழுதினர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முதல் நூறு இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. மேலும் உள்ளூரை சேர்ந்த பலர் தேர்வு எழுதியிருந்தநிலையில், அவர்களில் தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததும் தெரியவந்தது.
இதன் மூலம் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், ஆவணங்களை சரிபார்த்த பின்பு தான் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement