குரூப் 4 தேர்வு முறைகேடு! தலைமை காவலர் சித்தாண்டி குடும்பத்தோடு தலைமறைவு! விடாது துரத்தும் சிபிசிஐடி!

குரூப் 4 தேர்வு முறைகேடு! தலைமை காவலர் சித்தாண்டி குடும்பத்தோடு தலைமறைவு! விடாது துரத்தும் சிபிசிஐடி!


TNPSC Group 4 Exam Fraud

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், சென்னையில் தலைமை காவலராக பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டி என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

tnpsc

குருப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தாண்டி என்ற காவலரின் மனைவி மற்றும் 2 சகோதரர்கள் குருப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறித்து புகார் எழுந்ததால், பெரிய கண்ணனூரில் உள்ள அவர்களின் வீட்டிற்கு சிபிசிஐடி போலீசார் சென்றனர்.

இதையடுத்து, காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த உதவியாளர் வேல்முருகன் என்பவரை கைது செய்தனர். இவர், தலைமைக் காவலர் சித்தாண்டியின் தம்பி என்பதும், குரூப் -2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பெற்று காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2018 நவம்பர் மாதம் இளநிலை உதவியாளராக சேர்ந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.