ஆடு மேய்த்தவர் அரசு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம்! சாதித்தது எப்படி? அம்பலமான உண்மை!

ஆடு மேய்த்தவர் அரசு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம்! சாதித்தது எப்படி? அம்பலமான உண்மை!


tnpsc-exam-result-issue

தமிழக அரசின் அரசு பணியாளர் தேர்வுக்கான (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த தேர்வுக்கான  முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. 

இந்த தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ என்பவர் 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

tnpsc exam

மேலும், ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 3,214 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் 100 இடங்களில் 35 இடங்களை இந்த பகுதியில் தேர்வு எழுதியினார்கள் பிடித்தனர். அதிலும், இரண்டு தேர்வு மையங்களில் இருந்து மட்டும் அதிகப்படியான நபர்கள் தேர்ச்சி பெற்றது சந்தேகத்தை எழுப்பியது.

அதேபோல, முதல் இடம் பிடித்த திருவராஜூ சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் இருந்தும் இவர் ராமேசுவரத்தில் தேர்வு எழுதியது ஏன்? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்து, இதற்காக வருகிற 13-ந் தேதி அவரை விசாரணைக்காக சென்னை வரும்படி திருவராஜூவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதுபற்றி திருவராஜூ  கூறுகையில், நான் ஆடு மேய்த்துக்கொண்டே தீவிரமாக படித்து வெற்றிபெற்றுளேன். ராமேசுவரம் பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்ததால் ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதினேன். என்னிடம் விசாரணை நடத்த வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில் நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பேன் என திருவராஜூ கூறியுள்ளார்.