நோட்டிபிகேஷன் வந்திருச்சுல்ல, இப்ப பாரு.. வைரலாகும் கலக்கல் மீம் வீடியோ.!

நோட்டிபிகேஷன் வந்திருச்சுல்ல, இப்ப பாரு.. வைரலாகும் கலக்கல் மீம் வீடியோ.!


TNPSC Exam Notification Examupdates360 Meme Video Goes Viral on Social Media

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதுதொடர்பான மீம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

நடிகர் வடிவேல் நடத்துனராக நடித்த திரைப்படத்தில் நகைச்சுவை காட்சியொன்று இருக்கும். பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை மெதுவாக இயங்கிக்கொண்டு இருந்த சமயத்தில், பேருந்தில் பயணித்த ஒருவர் பேருந்தை ஏன் ஓட்டுநர் மெதுவாக இயக்குகிறார்? என கேட்பார். 

அதற்கு வடிவேல் அருகில் உள்ள பெண்ணை எழுந்து முன்னே சென்று அமரச்சொல்வார். பெண்மணி முன்னே சென்றதும் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை அதிவேகத்தில் இயக்கி செல்வார். சில நொடிகள் கடந்ததும் பெண்ணை மீண்டும் இருக்கைக்கே வரசொல்லிவிடுவார்கள். இந்த நகைச்சுவை காட்சிகள் நம்மிடையே மறக்காத சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் செய்தியாளர்களை சந்தித்து, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். வரும் பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் என தெரிவித்தார். 

tnpsc

அரசுப்பணி தேர்வுக்காக தயாராகி வந்த பலரும், கொரோனாவால் தேர்வு தள்ளிபோனதை தொடர்ந்து பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர். இந்த சூழலில், இன்று 2022 பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு வேவையாகியுள்ளதால், அரசுத்தேர்வுக்கு தயாராகி வந்த பலரும் மீண்டும் படிப்பை கையில் எடுக்க முடிவு செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ, மேற்கூறிய நகைச்சுவை நிகழ்வு காட்சிகளை ஒப்பிட்டு மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதும் ஒவ்வொருவரும் எப்படி படிக்கப்போகிறார்கள் என்பது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.