குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் 40 மதிப்பெண் கட்டாயம் - டி.என்.பி.எஸ்.சி..!

குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் 40 மதிப்பெண் கட்டாயம் - டி.என்.பி.எஸ்.சி..!


TNPSC Exam Announcement Group 4 Exam Tamil Language 40 Marks Mandatory

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் மூலமாக 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்தார்.

இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன், இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "வரும் 2022 TNPSC போட்டித்தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்படுகிறது. குருப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் 2022 பிப்ரவரி மாதம் நடைபெறும். 

இதனைப்போல, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் மூலமாக 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

tnpsc

கடந்த காலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட, ஈடுபட உடந்தையாக இருந்த அதிகாரிகள் பணியில் இல்லை. தேர்வர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் தேர்வு மையம் இருந்தால் அதற்கான விளக்கம் கேட்கப்படும். தேர்வு பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு 1 வாரத்தில் வெளியிடப்படும்.

காலிப்பணியிடம் மாற்றி அமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. குரூப் 4 தமிழ்மொழி தேர்வில் கட்டாயம் 40 மதிப்பெண் பெற வேண்டும். " என்று தெரிவித்தார்.