புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Breaking: மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்; மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.!
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் பிடியில் சென்னை
சென்னையில் உள்ள மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, வங்கக்கடல் பகுதியில் உருவாகிய பெஞ்சல் புயல் கரையை கடக்கிறது. இன்று அதிகாலை 4 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இதையும் படிங்க: "தமிழ் சொல்லித்தந்தது மனிதத்தை" - வெள்ளநீரில் சிக்கிய ஆட்டோவுக்கு உதவிய பேருந்து.. நெகிழவைக்கும் காணொளி.!
மின்சாரம் துண்டிப்பு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்களும் சாய்ந்து மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்ததும் மின்விநியோகம் செய்யப்படும்.
மின்வாரியம் அறிவிப்பு
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மழை, புயல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை புரிந்துகொண்டு, கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) November 30, 2024
வரை காலநீட்டிப்பு.#TNEB pic.twitter.com/q2eBcu3vLR
இதையும் படிங்க: ஆசையாக தங்க நகை கேட்ட மனைவி.. பக்கத்துவீட்டு பெண்ணின் கழுத்தில் கைவைத்த இளைஞன்.. தாம்பரத்தில் பகீர்.!