இன்று முதல் தமிழ்நாட்டு பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை.. நீர்நிலை அருகில் வசிக்கும் மக்களே கவனம்.!TN School Students Half Year Exam Holiday

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற அரையாண்டு தேர்வுகள் நேற்றுடன் நிறைவுபெற்றது. 

தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் ஜனவரி 2ம் தேதிக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று முதல் அரையாண்டு தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் என விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் மாணவர்கள் குஷியாகியுள்ளனர். 

அவர்களை சமாளிக்க இயலாமல் பெற்றோர் திணறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல, தற்போது மழை நேரம் என்பதால், குழநதைகளை அவர்களின் நண்பர்களுடன் குட்டை, குளம் போன்ற நீர் நிலைகளுக்கு விளையாடவோ, நீச்சல் கற்றுக்கொள்ளவோ, மீன் பிடிக்கவோ தனியே அனுப்ப வேண்டும்.