புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிச்சிருந்தீங்களா? உங்களுக்கான குட் நியூஸ் இதோ.!
தமிழ்நாட்டில், மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப அட்டை, குடும்பத்தின் அடையாளமாகவும், கேஸ், அரசின் நிதிஉதவி, பண்டிகை கால பரிசுத்தொகுப்பு போன்றவை பெற தேவையான ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆவணங்கள் வாங்க முக்கிய ஆவணமாகவும் ரேஷன் அட்டை உள்ளது.
2.89 இலட்சம் விண்ணப்பங்கள்
இதனிடையே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதிதாக ரேஷன் அட்டைகள் கேட்டு அரசுக்கு மொத்தமாக 2.89 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இவற்றின் சரிபார்ப்பு மற்றும் பிற சோதனைகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: #Breaking: "தமிழகத்திற்கு உறுதுணையாக இருப்போம்" - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.!
ரேஷன் அட்டைகள்
:
இந்நிலையில், அரசுக்கு கிடைக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1.54 இலட்சம் ரேஷன் அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விண்ணப்பங்களில் சுமார் 1.27 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், மறுபரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்; 13 பேருக்கு சிறுநீரக பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை.!