#Breaking: போலி பில் போட்டால் கடுமையான நடவடிக்கை - ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை.!



TN Govt Warning to Ration Shop Salesman 

நியாய விலைக்கடையில் போலி பில் பதிவு செய்தால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் கிடப்பதை உறுதி செய்யும் பொருட்டும், அரசின் சில திட்டங்கள் எளிமையாக மக்களை சென்றுசேரவும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் 2.5 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டை பயனாளிகள் இருக்கின்றனர்.

உள்ளூரில் மக்களின் நிலையை பொறுத்து விற்பனையாளர்கள் மக்களுக்கு ரேஷன் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். சில இடங்களில் ரேஷன் பொருட்களை விற்பனை அதிகாரிகள் மக்களுக்கு வழங்காமல் வெளியே கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது, பயனாளிகள் பொருட்களை வாங்காமலேயே பில் போடுவது என இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்காமல் வழங்கியதாக போலியான பில் தயார் செய்தது உறுதியானால் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Note: Title Image Respectative