தமிழகம்

#Breaking: அரையாண்டு விடுமுறை அறிவிப்பு வெளியானது.. உற்சாகத்தில் பள்ளி மாணவர்கள்.! 

Summary:

#BigBreaking: அரையாண்டு விடுமுறை அறிவிப்பு வெளியானது.. உற்சாகத்தில் பள்ளி மாணவர்கள்.! 

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனாவை தொடர்ந்து உருமாறிய ஒமிக்ரான் அச்சமும் ஏற்பட்டு இருந்தாலும், பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து அரசினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "டிச. 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றசாட்டுகள் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.


Advertisement