அண்ணாமலை மீது ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்தாக கூறப்பட்ட விவகாரம்; ஆளுநர் மளிகை விளக்கம்.!



TN Governor Palace Reject Allegations on Annamalai FIR Issue 

 

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, குற்ற வழக்கு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று வைரலானது. இதனை உண்மை என நம்பிய இடதுசாரி ஆதரவாளர்கள் அதனை விவாத பொருளாக்கி இருந்தனர்.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்க, அவருக்கு வழங்கப்பட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பு முறையே காரணம், அவர் முன்னாள் ஐபிஎஸ் என்பதால் இவ்வாறான நடைமுறை என பல தகவலும் பகிரப்பட்டு வந்தன.

இதையும் படிங்க: ஒருவிரல் புரட்சி? அண்ணாமலைக்காக விரலை வெட்டிய பாஜக நிர்வாகி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!

ஆளுநர் மாளிகை விளக்கம்

இந்நிலையில், தற்போது ஆளுநர் மாளிகை இது குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் அவர்களால், பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஆளுநர் குற்றவழக்குக்கு வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக பரவி வரும் தகவல் உண்மைக்கு மாறானது. இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. அண்ணாமலையின் மீது குற்றவழக்கு பதிவு செய்ய ஆளுநர் மாளிகை எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #LokSabha: "ஓட்டுக்காக வரவில்லை உங்க ஆசீர்வாதம் போதும்"! முதியோர் இல்லத்தில் கண் கலங்கிய அண்ணாமலை.!!