சுட சுட பரோட்டா ரெடி.. பரோட்டா மாஸ்டராக மாறிய அதிமுக வேட்பாளர்.. பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு..

சுட சுட பரோட்டா ரெடி.. பரோட்டா மாஸ்டராக மாறிய அதிமுக வேட்பாளர்.. பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு..


TN Election admk candidate make paratto in hotel

வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஹோட்டலில் பரோட்டா போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. ஆட்டோவில் சென்று ஓட்டு சேகரிப்பது, கடையில் டீ குடித்துக்கொண்ட மக்களிடம் ஓட்டு சேகரிப்பது என விதவிதமாக வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக், பரோட்டா கடையில் பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடந்த நான்கு நாட்களாக வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அசோக், இன்று தரமணி பகுதியிலுள்ள பெரியார் நகரில் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த பரோட்டா கடை ஒன்றுக்கு சென்றிருந்த அசோக், கடையில் பரோட்டா போட்டு கடை ஊழியர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.