தமிழகத்தில் பொது போக்குவரத்து வசதிக்கு அனுமதி.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.!

தமிழகத்தில் பொது போக்குவரத்து வசதிக்கு அனுமதி.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.!


TN CM discussing with district collectors about allow transport in TN

தமிழகத்தில் பொதுப்போக்குவரது அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

உலகம்  முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பலமடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாமா? அல்லது குறைக்கலாமா எனவும், பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்தும் தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

corona

நாட்டிலேயே தமிழகம் கொரோனா பரிசோதனையில் முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு  அனுமதி ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.