தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
என்னது உதயநிதி துணை முதல்வரா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்..!

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று, இன்று தமிழ்நாடு விளையாட்டு நலன் மற்றும் மேம்பாடு துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.
அரசியலுக்கு தனது குடும்பத்தில் இருந்து இன்னொருவர் வேண்டாம் என முந்தைய காலங்களில் அவரை அரசியலில் இருந்து விலக்கி வைத்திருந்தாலும், காலத்தின் தேவையால் உதயநிதி அரசியலுக்குள் நுழைந்தார்.
அதனைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாழ்க்கைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால், சென்னை திருவெல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டப்பேரவை வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டு, பின் அமைச்சராக பதவிலியேற்றார்.
அவ்வப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவதாகவும், விரைவில் அவரிடம் கட்சி மற்றும் ஆட்சிப்பொறுப்பை மு.க ஸ்டாலின் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தனது மகனுமான உதயநிதி ஸ்டாலின், துணை முதலைவராக பொறுப்பேற்கப்போவதில்லை. அவை வதந்தியே என விளக்கம் அளித்துள்ளார்.