BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இந்து சமய அறநிலையத்துறை கோவிலை இடித்து நிலத்தை ஆக்கிரமித்த வி.சி.க பிரமுகர்.. 4 பேர் கைது: அதிரவைக்கும் சம்பவம்.!
விநாயகர் கோவிலை இடித்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான வி.சி.க பிரமுகர் தேடப்பட்டு வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்ட கும்பல், கோவிலை இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செய்யாறு காவல் துறையினர், விசாரணை நடத்தி செய்யாறு பேருந்து நிலையம் அருகே இருந்த விநாயகர் கோவிலை ஆக்கிரமித்த வி.சி.க பிரமுகர் தெய்வமணியின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்திருந்த தேவ சிகாமணி, எஞ்சியுள்ள கோவிலையும் ஆக்கிரமிக்கும் பொருட்டு அதனை இடித்து இருக்கிறார். இதனையடுத்து, கோவிலை இடித்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட தேவ சிகாமணியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். எஞ்சிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வாக்குமூலத்தின் பேரில் வி.சி.க பிரமுகரை காவல் துறையினர் தேடுகின்றனர்.