"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; காரில் பயணித்த 7 பேர் துள்ளத்துடிக்க பலி.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், அந்தனூர் தேசிய நெடுஞ்சாலையில் காரின் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 சிறார்கள், 1 பெண், 4 ஆண்கள் என 7 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூர் நோக்கி பயணம் செய்த காரின் மீது, திருவண்ணாமலை நோக்கி பயணித்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உடல்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தனது இரங்கலை பதிவு செய்து ரூ.2 இலட்சம் நிதிஉதவி அறிவித்துள்ளார்.
பலியானோரின் விபரங்கள் சேகரிக்கப்ட்டு வருகின்றன.