தாயை மதுபோதையில் அடித்த தந்தை.. நெஞ்சம் தாளாது குடிகார தகப்பனின் கழுத்தறுத்து கொன்ற 17 வயது மகன்.. "குடி குடியை சீரழிக்கும்".!

தாயை மதுபோதையில் அடித்த தந்தை.. நெஞ்சம் தாளாது குடிகார தகப்பனின் கழுத்தறுத்து கொன்ற 17 வயது மகன்.. "குடி குடியை சீரழிக்கும்".!


tiruvannamalai-arani-son-killed-father-with-blade-he-to

தன்னை ஈன்றெடுத்த தாயை தந்தை குடிபோதையில் அடித்து துன்புறுத்தும் செய்தியை கேட்டு துயரடைந்த மகன், தாயின் மீது வைத்த பாசத்தால் தந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் வசித்து வருபவர் கதிரேசன் (வயது 42). இவர் நெசவு தொழிலாளியாக இருந்து வருகிறார். கதிரேசனின் மனைவி மலர்க்கொடி. தம்பதிகளுக்கு 17 வயதுடைய மகன் மற்றும் 15 வயதுடைய மகள் இருக்கின்றனர். 

கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக கதிரேசன் தனது மனைவி மற்றும் மகளுடன் வேலை தேடி ஆந்திரபிரேதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்தவாறு நெசவு தொழிலை மேற்கொண்டு வந்த நிலையில், மகனை மட்டும் ஆரணியில் உள்ள உறவினரின் இல்லத்தில் தங்கவைத்துள்ளார். 

அவர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையாகி இருந்த கதிரேசன், தினமும் மதுபானம் அருந்திவிட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த ஒருவாரமாகவே தம்பதியிடையே இதுகுறித்து தகராறு நடைபெற்று வந்துள்ளது. 

Tiruvannamalai

தந்தையின் செயல்பாடுகள் மற்றும் கொடுமை குறித்து தாய் மகனிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, மதனப்பள்ளி புறப்பட்டு சென்ற மகன், தந்தையை கண்டித்து இருக்கிறார். நேற்று முன்தினத்திலும் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்படவே, மகனின் கண்முன்னே கதிரேசன் மனைவி மலர்கொடியை தாக்கியுள்ளார். 

தாய் துயரடைவதை கண்டு மனம்தாளாது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கதிரேசனின் மகன், தந்தையை அடித்து கீழே தள்ளிவிட்டு, அவரின் கழுத்தை பிளேடால் கறகறவென அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில், கதிரேசனின் கழுத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியேறி பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார். 

இதனைத்தொடர்ந்து, மதனப்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்ற 17 வயது சிறுவன், தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். பின்னர், கதிரேசனின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கதிரேசனின் மகனை கைது செய்தனர்.

"மதுப்பழக்கம் உயிரை குடிக்கும், குடும்ப நலனை கெடுக்கும், எதிர்காலத்தை சீர்குலைக்கும்".