ஆடுகளை குளிக்க வைக்க சென்று, ஏரியில் மூழ்கி 3 சகோதரிகள் பரிதாப மரணம்.! மாட்டுப்பொங்கலன்று சோகம்.!

ஆடுகளை குளிக்க வைக்க சென்று, ஏரியில் மூழ்கி 3 சகோதரிகள் பரிதாப மரணம்.! மாட்டுப்பொங்கலன்று சோகம்.!


Tiruvannamalai 3 Sisters Died on Pond

சு. கம்பம்பட்டு பகுதியில் ஆடுகளை ஏரி நீரில் குளிக்கவைக்க அழைத்து சென்ற 3 உடன்பிறந்த சகோதரிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சு.கம்பம்பட்டு பள்ளிகூடத்தெருவை சேர்ந்தவர் மாபூஸ்கான் (வயது 34). இவரின் மனைவி தில்ஷாத் (வயது 30). இந்த தம்பதிக்கு நஸ்ரின் (வயது 15), நசீமா (வயது 15), ஷாகிரா (வயது 12), ஷபரின் (வயது 10), பரிதா (வயது 8) ஆகிய 5 மகள்கள் உள்ளனர். 

இவர்களில், இரட்டை சகோதரிகளான நஸ்ரின் மற்றும் நசீமா ஆகியோர் ஒன்பதாம் வகுப்பும், ஷாகிரா ஏழாம் வகுப்பும் பயின்று வந்தனர். மேலும், இவர்களின் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. 

நேற்று மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை குளிக்க வைக்க நஸ்ரின், நசீமா, ஷாகிரா ஆகியோர், ஏரிக்கு ஆடுகளை அழைத்து சென்றுள்ளனர்.

Tiruvannamalai

மூவரும் நீரில் இறங்கி ஆடுகளை குளிக்கவைத்துக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மூவரும் ஆழமா பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.