காவல் ஆய்வாளரின் மகனிடம் வழிப்பறி கும்பல் கைவரிசை.. லிப்ட் கேட்பது போல நடித்து நடுரோட்டில் சம்பவம்.! இரவு பயணிகளே உஷார்.!

காவல் ஆய்வாளரின் மகனிடம் வழிப்பறி கும்பல் கைவரிசை.. லிப்ட் கேட்பது போல நடித்து நடுரோட்டில் சம்பவம்.! இரவு பயணிகளே உஷார்.!


Tiruppur Palladam Robbery Gang Atrocity Police Inspector son Injured

லிப்ட் கேட்பது போல நடித்து காவல் ஆய்வாளரின் மகனை தாக்கிய கும்பல், அவரிடம் இருந்த 3 சவரன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கத்தை பறித்து சென்றது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் வசித்து வருபவர் திருமலை ராஜன். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் பூபாலன் (வயது 38). 

இவர் அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவில் தனது இருசக்கர வானத்தில் அவிநாசிபாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார்.

Tiruppur

இவரின் வாகனம் பல்லடம் மாதாபூர் அருகே வருகையில் ஒருவர் லிப்ட் கேட்டு இருக்கிறார். இரவு நேரம் என்பதால் உதவி செய்யலாம் என வாகனத்தை நிறுத்த, பூபாலை நோக்கி வந்த 2 பேர் கும்பல் அவரை தாக்கி 3 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றை பறித்து சென்றது.

இதனையடுத்து, காயமடைந்த பூபாலன் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மர்ம நபர்களுக்கு வலைவீசியுள்ளனர். மேலும், பூபாலனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.