அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: காவல் வாகனம் மோதி சிறுமி பரிதாப பலி; திருப்பூரில் பரபரப்பு சம்பவம்.. மக்கள் போராட்டம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறை வாகனம் சென்றுகொண்டு இருந்தது. அப்போது, சாலையில் இருந்த 6 வயது சிறுமியின் மீது வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், காவல் துறையினர் வாகனம் மோதி சிறுமி பலியானதால் பொதுமக்கள் பெரும் ஆவேசத்திற்கு உள்ளாகினர்.

மேலும், காவல் துறை அதிகாரிகளின் வாகனத்தை மேற்படி செல்லவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
முதற்கட்ட தகவலின்படி விஜயாவரம் பகுதியை சேர்ந்த சிறுமி திவ்யதர்ஷினி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.