வீட்டில் இருந்து வெளியேறி திருப்பூரில் விழிபிதுங்கி நின்ற 14 வயது சிறுமி, 15 வயது சிறுவன்; இன்ஸ்டா காதலால் இன்ஸ்டன்ட் திருமணம் ஆசை..!

வீட்டில் இருந்து வெளியேறி திருப்பூரில் விழிபிதுங்கி நின்ற 14 வயது சிறுமி, 15 வயது சிறுவன்; இன்ஸ்டா காதலால் இன்ஸ்டன்ட் திருமணம் ஆசை..!



Tiruppur minor age couple rescued 

இன்ஸ்டாகிராம் செயலியால் காதலில் விழுந்த சிறார் ஜோடி திருப்பூரில் மீட்கப்பட்டது.

திருப்பூர் புதிய பேருந்து நிறுத்தத்தில், சம்பவத்தன்று திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் 15 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுமி ஆகியோர் பேருந்து நிலையத்தில் தவித்தவாறு நின்று கொண்டு இருந்தனர்.

அவர்களை கண்டு சந்தேகமடைந்த காவல் துறையினர், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், சிறுமி கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது. 

இவர்கள் இருவரிடையே இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக பழக்கம் ஏற்பட, நட்பாக பேசி வந்தவர்கள் செல்போன் நம்பரை பகிர்ந்து இருக்கின்றனர். பின்னர் காதல் வயப்படவே, ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். 

Latest news

காதல் ஜோடிகள் உணர்வின் உச்சகட்டமாக ஆர்வக்கோளாறு காரணமாக, வீட்டில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறினர். திருப்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருவரும் சந்தித்து, மேற்படி எங்கு செல்லலாம் என தெரியாமல் விழிபிதுங்கி இருந்துள்ளனர். 

இவர்களை கவனித்த காவல் துறையினர் சிறார்களிடையே விசாரணை நடத்துகையில் உண்மை தெரியவந்துள்ளது. இருவரையும் காப்பகத்தில் தங்க வைத்த அதிகாரிகள், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.