புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க காரை திருடிய இளைஞர்; பெட்ரோல் தீர்ந்துபோய் நடுவழியில் சிக்கிய சோகம்.!
காரை திருடி கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் இளைஞர் சிக்கிக்கொண்ட சம்பவத்தில், கடனை அடைக்க செய்த செயல் அம்பலமானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், காக்காதோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் நின்று கொண்டு இருந்தது. அவ்வழியே கண்காணிப்பு பணிக்கு சென்ற காவல் துறையினர், காருக்குள் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் போதையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று நடந்த விசாரணையில், அவர் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியில் வசித்து வரும் விஜய் (வயது 22) என்பது தெரியவந்தது. கஞ்சா & மதுபோதைக்கு அடிமையான விஜய் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் சொந்த வீடு கட்டுவதற்கு ரூ.8 இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.
நிரந்தரமான வேலைகள் இல்லாத காரணத்தால் கடனை அடைக்க இயலாமல் தவித்த விஜய், பொள்ளாச்சியில் வேலை தேடியுள்ளார். அங்கு வாகனம் கன்சல்டிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், பதிவு செய்யப்படாத மாருதி காரை திருடி விற்பனை செய்ய கொடைக்கானலுக்கு வந்துள்ளார்.
பின்னர், கொடைக்கானல் செல்ல வழி தெரியாமல் பெட்ரோலும் தீர்ந்து வேடசந்தூர் சாலையில் நின்று, நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அந்த சமயத்தில் விஜய் காவல் துறையினர் வசம் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து, பொள்ளாச்சியில் இருக்கும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு வாகனம் ஒப்படைக்கப்பட்டது. விஜய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.