வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் - போக்ஸோவில் தூக்கிய அதிகாரிகள்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரின் மகன் மனோஜ் குமார் (வயது 30). இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள வயலூர் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்த நிலையில், சிறுமிக்கும் - மனோஜ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில், மனோஜ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமியிடம் திருமண ஆசை காண்பித்து தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
மகளை காணாது பரிதவித்த பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், தனியார் பேருந்து ஓட்டுனர் மனோஜ் குமாரின் காதல் மற்றும் பாலியல் தொல்லை விவகாரம் உறுதியாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் மனோஜை கைது செய்தனர்.