தமிழகம்

கணவரின் உல்லாச அழைப்பை மறுத்த 54 வயது மனைவி.. அரங்கேறிய படுகொலை.. திருப்பூரில் பயங்கரம்.!

Summary:

கணவரின் உல்லாச அழைப்பை மறுத்த 54 வயது மனைவி.. அரங்கேறிய படுகொலை.. திருப்பூரில் பயங்கரம்.!

நள்ளிரவு நேரத்தில் மனைவியை உல்லாசமாக இருக்க அழைத்த கணவன், மனைவி உல்லாசத்திற்கு உடன்பட மறுத்ததால் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், ஊர்கவுண்டர் தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). இவரின் மனைவி ஈஸ்வரி (வயது 54). இவரின் மகன் தினேஷ் குமார் (வயது 29). இவர் இராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் கணேசன் - ஈஸ்வரி தம்பதியுடன், ஈஸ்வரியின் தாய் ராஜம்மாள் (வயது 80) வசித்து வருகிறார். 

ஈஸ்வரி - கணேசன் வீட்டில் நெசவு தொழில் செய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ஈஸ்வரி அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தபோது, கணேசன் தனது மனைவியை எழுப்பி உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஈஸ்வரியோ உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த கணேசன் தனது மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். ஈஸ்வரி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில், கொலையை மறைக்க முடிவெடுத்த கணேசன் மனைவியின் உடலை அமராவதி ஆற்றில் வீசிவிடலாம் என எண்ணியுள்ளார்.

மனைவியின் உடலை தார்பாயில் சுருட்டி உடலை எடுத்து செல்ல முற்பட்ட நிலையில், பொழுது விடிய தொடங்கிவிட்டதால் மேற்படி ஏதும் செய்ய இயலவில்லை. காலையில் ராஜம்மாள் எழுந்து பார்க்கையில் மகள் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மடத்துக்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் மேலும், விசாரணை செய்ததில் கணேசன் கொலையை ஒப்புக்கொள்ளவே, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement