தனியே கழன்று ஓடிய தனியார் பள்ளி வாகன சக்கரம்.. 15 குழந்தைகள் காயம்.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!Tiruppur Dharapuram Private School Van Tire Damaged 15 Childs Injured

தாராபுரம் உடுமலை சாலையில், பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் டயர் கழன்று ஓடிய சம்பவம் நடந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் - உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி விவேகம் மேல்நிலைப்பள்ளியின் வாகனம் வந்தது. இந்த வாகனம் பொன்னாபுரம் பகுதி அருகே வந்தபோது, வேனின் பின்பக்க சக்கரம் கழன்று தனியே ஓடியுள்ளது. 

இந்த விபத்தில், 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயம் அடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ள நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பள்ளி சார்பில் இயக்கப்பட்டு வரும் வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.