தமிழகம்

கணவன் இறந்த துயரம் மறைவதற்குள் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. காற்றலைக்குள் நடந்தது என்ன?.. சடலங்கள் மீட்பு., அதிரவைக்கும் தகவல்.!

Summary:

கணவன் இறந்த துயரம் மறைவதற்குள் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. காற்றலைக்குள் நடந்தது என்ன?.. சடலங்கள் மீட்பு., அதிரவைக்கும் தகவல்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், பூளவாடி எருக்கலாம்பாளையம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 47). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர்களில் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 

இதே பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவரின் மனைவி மாரியம்மாள் (வயது 40). நடராஜன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிடவே, தனியாக இருந்த மாரியம்மாளுக்கும் - மணிகண்டனிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவர, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத கள்ளக்காதல் ஜோடி தைரியமாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக கள்ளக்காதல் ஜோடி இருவரும் மாயமாகியுள்ளது. இருவரையும் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் இருவரும் கம்பி நீட்டி இருக்கலாம் என்றும் எண்ணியுள்ளனர். 

இந்த சமயத்தில், பொம்மநாயக்கன்பட்டி காற்றாலையில் ஆண் - பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, விசாரணையில் அது கள்ளக்காதல் ஜோடி மாரியம்மாள் - மணிகண்டன் என்பது உறுதியானது. இருவரின் உடலுக்கு அருகே மதுபானம் மற்றும் சாணி பவுடர் ஆகியவை இருந்துள்ளது. 

இதனால் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.


Advertisement