நண்பர்களுடன் கத்தி, கூப்பாடு போட்டு பப்ஜி விளையாட்டு.. கையை வெட்டிய முதியவர்.. ஐயோ., அம்மா கதறல்.!

நண்பர்களுடன் கத்தி, கூப்பாடு போட்டு பப்ஜி விளையாட்டு.. கையை வெட்டிய முதியவர்.. ஐயோ., அம்மா கதறல்.!


Tiruppur College Student Attacked by Old Man They Play Pubg Game Old Man Got Extreme Angry Night

நள்ளிரவில் உறங்க விடாமல் பப்ஜி கேமை விளையாடி தொந்தரவு செய்த இளைஞரை முதியவர் அரிவாளால் வெட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

இன்றுள்ள இளம் தலைமுறை பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி, எந்த நேரமும் அங்க வாரான் பாரு, இங்க வாறன் பாரு, **தா சுட்டு தள்ளு, அவனை போடு என்று நாக்கூசும் வார்த்தையை கூசாமல் பேசி தங்களின் மன அமைதியையும், அருகில் இருப்போரின் பொறுமையையும் சோதித்து கூட்டமாக சேர்ந்து உடல்நலத்தையும், மனநலத்தையும் கெடுத்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகம்பாளையம், பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 19). இவர் தாராபுரம் நகரில் செயல்பட்டு வரும் அரசு ஐ.டி.ஐ-யில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். இவர் தனது வீட்டருகே உள்ள துணி துவைக்கும் கல்லில் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடுவது வழக்கம். 

Tiruppur

சம்பவத்தன்று இரவிலும் நண்பர்களுடன் கார்த்திக் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், பக்கத்து வீட்டினை சேர்ந்த முதியவர் ராமசாமி (வயது 65), தூங்குவதற்கு இடையூறை ஏன் ஏற்படுத்தி விளையாடுகிறீர்கள், அமைதியாக விளையாடுங்கள் என்று கண்டித்து இருக்கிறார். 

இதனால் இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்படவே, முதுமையில் ஏற்கனவே பல்வேறு உடல்நல பிரச்சனையால் தவித்து வந்த ராமசாமி ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, வாக்குவாதம் செய்த கார்த்திக்கை வெட்ட, அவரின் கைகளில் பலத்த வெட்டுக்காயம் விழுந்துள்ளது. 

Tiruppur

பதறிப்போன சில்வண்டுகள் ஐயோ அம்மா என கதற, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில், வீரபாண்டி காவல் துறையினர் ராமசாமியை கைது செய்தனர். 

பப்ஜியோ, ப்ரீ பயரோ, எந்த எழவோ கூட்டமாக சேர்ந்து விளையாடுபவர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் சென்று விளையாடலாம். அல்லது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் விளையாடலாம். வயதான காலத்தில் வாழ்நாளை கடத்தி வாழ்ந்து வருவோருக்கு இடையூறை ஏற்படுத்தி, அவர்களின் ஆத்திரத்தில் வரும் பலனை அனுபவிக்க வேண்டாம்.