தீராத வயிற்றுவலி.. ஸ்கேனில் அதிர்ச்சி ரிப்போர்ட்.. 18 கிலோ வயிற்று கட்டி அகற்றம்..!Tirupattur Vaniyambadi Woman Stomach Tumor Govt Hospital Surgery to Remove

அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், 2 நாட்களுக்கு முன்னதாக 45 வயதாகும் பெண்மணி தீராத வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளார். 

மேலும், அவரின் வயிறும் வீக்கமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கும் போது வயிற்றில் பெரிய அளவிலான கட்டி இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அதனை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். 

Tirupattur

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நதீம் அஹ்மத் தலைமையிலான மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்து 20 செ.மீ விட்டம் கொண்ட 18 கிலோ எடையுள்ள கட்டிய அகற்றினர். தற்போது பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.