பால்தான வேணும் இந்தா.. பசியால் பாலுக்கு அழுத பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை..!!

பால்தான வேணும் இந்தா.. பசியால் பாலுக்கு அழுத பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை..!!


Tirupattur Baby Killed by Father

பசிக்கு பால் கேட்டு அழுத குழந்தை தந்தையால் கொலை செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு பதனவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மனைவி சத்யா. இந்த தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். விவசாய பணிகளை செய்து வந்த சிவக்குமார், அவரது மனைவி சத்யா இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இருவருக்கும் கடன் தொடர்பான பிரச்சனை இருந்ததால் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. அந்த சமயத்தில் ஆத்திரத்தில் மூத்த மகளை அழைத்துக்கொண்டு சத்யா தனது தாயாரின் கிராமமான ஜல்லியூருக்கு சென்றுள்ளார்.

வீட்டில் 14 மாத பெண் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்த நிலையில், குழந்தையை சமாதானம் செய்ய இயலாமல் தவித்த சிவகுமார் ஒரு கட்டத்தில் சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்து இருக்கிறார். பின்னர் அதே விஷயத்தை தானும் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

Tirupattur

இரண்டாவது குழந்தையை கொலை செய்ய முயற்சித்து அதற்கும் விஷம் கொடுத்த நிலையில், அந்த குழந்தை சாப்பிடாமல் வாந்தி எடுத்து இருக்கிறது. பின்னர் சுதாரித்து பயந்துபோன அவர் தனது சகோதரருக்கு போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி அழுதுள்ளார்.

விரைந்துவந்த சிவகுமாரின் சகோதரர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.