BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
#Breaking: திருப்பதி தேவஸ்தான நிர்வாகி மகன் மாரடைப்பால் திடீர் மரணம்.. மருத்துவமனையில் பறிபோன உயிர்.!
திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி. இவரின் மகன் சந்திரமௌலி ரெட்டி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட சந்திரமௌலி ரெட்டி, எக்மோ உட்பட பல சிகிச்சைகளின் பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சந்திரமௌலி உயிரிழந்த செய்தி அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.