1992 Vs 2023... நெல்லை மக்களை புரட்டியெடுத்த மழை-வெள்ளம்: அன்றும்., இன்றும்..!

1992 Vs 2023... நெல்லை மக்களை புரட்டியெடுத்த மழை-வெள்ளம்: அன்றும்., இன்றும்..!



Tirunelveli Rains 1992 Vs 2023

 

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்கள் வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவையால் எப்போதும் மழையை சந்திக்கும். இது இயல்பானது எனினும் இயற்கை 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது வழித்தடத்தை சுத்தம் செய்து, மக்களை ஏழை-செல்வந்தர், மண், மரங்கள் வித்தியாசமின்றி கடந்து செல்வார். 

அப்படித்தான் கடந்த 1992ம் ஆண்டு திருநெல்வேலியை தாக்கிய கடும் புயல் காரணமாக, அங்குள்ள 11 அணைகளும் விரைந்து நிரம்பின. அணைகள் உடையும் ஆபத்து ஏற்பட்டு பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் அவசர கதியில் திறக்கப்பட்டது. இதனால் கரையோரம் இருந்த வீடுகள் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டன. 

திருநெல்வேலி - கன்னியாகுமரி சாலை, கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சாலைகள் துண்டிக்கப்பட்டன. விவசாய நிலங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்றன. மழை-வெள்ளத்தினால் 23 பேர் பலியாகினர். நெல்லையில் முக்கிய பகுதியாக கருதப்படும் ஜங்க்சன் பேருந்து நிலையம் மூழ்கிப்போனது. 

இந்த பெருவெள்ளத்திற்கு பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப அரசு இயந்திரம் தீவிரமாக பணியாற்றினாலும், ஆற்றின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, மேற்படி எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலையை விட அதிக வெள்ளம் சூழல் உண்டானால் அதனை எதிர்கொள்ளவோ தயார்படுத்து வகையில் சீரமைப்பு பணிகள் இல்லை. இந்த நிலையே தமிழகத்தின் பல நகரங்களில் தொடருகிறது. 

தற்காலிக்காக சீரமைப்பு பணிகள் என எதை செய்தாலும், இயற்கை தன்னை சுழற்சி முறையில் தயார்படுத்தி வருவதால் மீண்டும் மழை வெள்ளம் ஏற்பட்டது. கடந்த வாரம் முதலாகவே நெல்லை மற்றும் தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் 1991-ஐ போல கனமழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ராஜா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், அவை கடந்து செல்லப்பட்ட நிலையில், அதனை உறுதிசெய்யும்பொருட்டு மழை புரட்டியெடுத்தது. முதலில் மழை பெய்யும் போது மக்கள் பெரிதாக அதை எடுத்துக்கொள்ளவில்லை எனினும், தமிழ்நாட்டில் அதிக அணைகள் கொண்ட மாவட்டமான நெல்லையில் இருக்கும் 11 அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 

இதனால் வீதிகள் தோறும் வெள்ளம் புகுந்ததை தொடர்ந்து, 1992 வெள்ளம் பலருக்கும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட சரியாக 31 ஆண்டுகால இடைவெளியில் திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களை வெள்ளம் ஆட்கொண்டுள்ளது. இதனால் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

கடந்த வெள்ளத்தின்போது நெல்லை சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும், தற்போதையை புகைப்படமும் ஒப்பிடப்பட்டு வைரலாகி வருகிறது.