தமிழகம்

4 காவலர்களை கொலை செய்ய முயன்ற நீராவி முருகனை சுட்டுக்கொன்ற காவல்துறை..!

Summary:

4 காவலர்களை கொலை செய்ய முயன்ற நீராவி முருகனை சுட்டுக்கொன்ற காவல்துறை..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே ரௌடி நீராவி முருகன் என்பவன் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்டான். இவனின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேடப்படும் குற்றவாளியாக இருந்த நீராவி முருகன் திண்டுக்கல் தனிப்படை காவல் துறையினரால் சுடப்பட்டான். 

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த நீராவி முருகனின் மீது மொத்தமாக 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், இவன் தூத்துக்குடி புதியம்பத்தூர் நீராவி தெருவில் வசித்து வந்ததால் ரௌடி முருகன், நீராவி முருகன் என அழைக்கப்பட்டான். 

திண்டுக்கல் மாவட்ட தனிப்படை காவல் துறையினர் கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் நீராவி முருகனை கைது செய்ய சென்றபோது, அவன் காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க அரிவாளால் தாக்கி இருக்கிறான். இதனால் 4 அதிகாரிகளுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அதிகாரிகள் ரௌடியை ஆயுதத்தை கீழே போட்டு சரணடையும்படி வலியுறுத்தவே, அவன் மறுப்பு தெரிவித்ததால் என்கவுண்டர் நடத்தப்பட்டுள்ளது. 


Advertisement