போலீஸ் வாகனத்தில் அமர்ந்து டிக்டாக் செய்த 3 இளைஞர்கள்! போலீசார் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

தூத்துக்குடியில் போலீசார் வாகனத்தின் மீது அமர்ந்து டிக்டாக் செய்த 3 இளைஞர்களுக்கு ஒரு நாள் முழுவதும் போக்குவரத்தை ஒழுக்கு படுத்த வேண்டும் என்ற தண்டனை வழக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு மெக்கானிக் ஷாப்பில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது அமர்ந்து மூன்று இளைஞர்கள் டிக்டாக் வீடியோவை எடுத்துள்ளனர்.
இதனை பார்த்த அந்த பகுதி காவல் துறையினர் அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களின் மன்னிப்பை ஏற்று கொண்ட அப்பகுதி போலீசார் அவர்களுக்கு சிறிய தண்டனையை மட்டும் வழங்கியுள்ளனர்.
அதாவது தூத்துக்குடி காய்கறி சந்தை முன்பு நாள் முழுவதும் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என்ற தண்டனை வழங்கினர். அதனை ஏற்று கொண்டு அந்த இளைஞர்களும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை செய்துள்ளனர்.