மூன்று நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்; ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுமா?..!!

மூன்று நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்; ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுமா?..!!



three-day-ration-shop-workers-strike-will-the-goods-be

‌தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சில  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் ஒன்பதாம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறும் பொதுவாக திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும்,

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் பணியாளர்களின் விவரங்களை தினமும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.