14 வயது சிறுமியிடம் வகுப்பறையிலேயே கண்ணடித்து ஐ லவ் யூ சொன்ன கணக்கு வாத்தி.. கண்ணிலேயே குத்திய உறவினர்கள்.!Thoothukudi Kovilpatti Teacher Worked at Thisaiyanvilai Say I Love You to 9 th class Girl Student

9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம் பள்ளி வகுப்பறையிலேயே கண்ணடித்து ஐ லவ் யூ சொன்ன ஆசிரியரின் கண்களை உறவினர்கள் குத்தி காயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, அய்யனேரி கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா (வயது 43). இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகேயுள்ள மேல்நிலைப்பள்ளியில், கடந்த ௬ வருடமாக கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வேலையின் காரணமாக திசையன்விளை பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். 

முத்தையா கடந்த சில நாட்களாவே 9 ஆம் வகுப்பு பயின்று வரும் 14 வயது சிறுமியிடம் தேவையில்லாமல் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று கணித பாடம் எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர், சிறுமியின் கைகளை பிடித்து சில்மிஷம் செய்துள்ளார். மேலும், வகுப்பின் போதே சிறுமி அருகே அமர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வகுப்பறையில் சிறுமியருகே அமர்ந்த முத்தையா, மாணவியை பார்த்து கண்ணடித்து 'ஐ லவ் யூ' என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறி, இனி பள்ளிக்கே நான் செல்லவில்லை என்று கதறியுள்ளார்.

Thoothukudi

மேலும், என்னை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் பெற்றோரை மிரட்டவே, அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் நள்ளிரவில் மகளின் துயரத்தால் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் முத்தையாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆசிரியர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, ஆத்திரமடைந்தவர்கள் அவரை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர்.

சிறுமியை பார்த்து கண்ணடித்து கண்களையும் தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு இரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் கொலை கேஸாகிவிடும் என கண்டித்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வைத்துள்ளனர். பின்னர், சிறுமியின் உறவினர்களே திசையன்விளை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியரை மீட்டு கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.