
சிறுமியுடன் காதல்.. சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ முகநூலில் பதிவு.. விபரீத முடிவால் சோகம்.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த மாணவி, அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ் என்பவர், சிறுமியுடன் பழகி வந்ததாக தெரியவருகிறது.
இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் சிறுமியை கண்டித்து இருக்கின்றனர். இதனால் சிறுமி லோகேஷை விட்டு விலக தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், லோகேஷ் சிறுமியின் புகைப்படத்தை சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவு செய்துள்ளார்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய சிறுமி, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement