மாமூல் கேட்டு தகராறு... அடிதடி.. திருவாரூரில் பயங்கரம்..!

மாமூல் கேட்டு தகராறு... அடிதடி.. திருவாரூரில் பயங்கரம்..!


thiruvarur-police-investigated-bakery-attack-issue

மாமூல் கேட்டு இருவர் கடை ஊழியர் மற்றும் முதலாளியை ஆபாசமாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் நகர் பகுதியில் கணேஷ் பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை இருவர் கடைக்கு மாமுல் கேட்டு வந்துள்ளனர்.

அப்போது கடை ஊழியர் 20 ரூபாய் கொடுத்த நிலையில், 'நாங்கள் என்ன பிச்சையா எடுக்கிறோம்' என்று கேட்டு அங்கு ள்ள பொருட்களை தள்ளி விட்டுள்ளனர்.

மேலும், கடை ஊழியர் மற்றும் முதலாளியை ஆபாசமாக திட்டி அங்குள்ள பொருட்களை நொறுக்கியுள்ளனர். இவை அனைத்தும் சிசிடிவி காட்சிகள் பதிவான நிலையில், இதுகுறித்து குடவாசல் காவல்துறையினர் தகவலறிந்து அங்கு சென்றுள்ளனர்.

thiruvarur

அப்போது சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், பால் கிட்டு, செந்தில் ஆகிய இருவரும் தான் இந்த காரியத்தை செய்தது என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களை கைது செய்ததால், குற்றவாளிகளை கைது செய்யும் வரை கடையடைப்பு தொடரும் என குடவாசல் வர்த்தக சங்கம் தெரிவித்திருக்கிறது.

இதனால் குடவாசல் நகர் குடியிருப்புவாசிகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.