அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
போட்டாபோட்டி பயணத்தில் அரசு - தனியார் பேருந்துகள்.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி, திருவாரூர் வழியே நேற்று அரசு பேருந்து (TN 68 N 0869) பயணம் செய்தது. இந்த பேருந்துக்கும், அவ்வழித்தடத்தில் வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் இணைத்து பயணிக்கும் தங்கம் ராமசாமி தேவர் (TN 68 AB 7996) என்ற பேருந்துக்கும் இடையே முந்திசெல்வதில் போட்டி நடந்துள்ளது.
போட்டிபோட்டு பயணம் செய்த பேருந்துகள் முந்திசெல்வதற்கும் இடம் கொடுக்கவில்லை. குறுகிய சாலையில் பேருந்துகள் பயணித்தபோது, அரசு பேருந்து தனக்கு முன்னாள் சென்ற லாரியை முந்த முயற்சித்துள்ளது.
இந்த இரண்டு வாகனங்களையும் சாலையோரம் மண்ணில் இறங்கி முந்திச்செல்ல தனியார் பேருந்து ஓட்டுநர் முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அரசு - தனியார் பேருந்துகள் சிக்கிக்கொண்டன.
நல்வாய்ப்பாக எந்த விதமான சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. நொடி தாமதம் நடந்திருந்தாலும் கட்டாயம் கோர விபத்து நடந்திருக்கும். இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்வாறான தனியார் பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியமான செயலால் பல சோகங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. அவை மீண்டும் நாகப்பட்டினம் வழித்தடத்தில் நடப்பதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் மீது குற்றசாட்டை முன்வைக்கின்றனர். எப்போதும், அதிவேகத்தில் பயணிப்பதையே அவர்கள் வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர்.