சாம்பார் சாதம் சாப்பிட்ட 8 வயது சிறுமி வாந்தி எடுத்து துடிதுடிக்க மரணம்..!Thiruvallur Uthukottai Sambar Satham ate Child Died 

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, சென்னங்காரணி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பிரியதர்ஷினி. இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

நேற்று இரவில் அனைவரும் சாப்பிட சாம்பார் சாதம் சமைக்கப்பட்டது. குடும்பத்தினர் அதனை சாப்பிட்டு உறங்கிய நிலையில், சிறுமி வாந்தி எடுத்து இருக்கிறார்.

Thiruvallur District

சாதாரண வாந்தியாக இருக்கலாம் என பெற்றோரும் அலட்சியமாக இருந்துவிட, விடியவிடிய வாந்தி தொடர்ந்துள்ளார். இதனால் அவசர கதியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அங்கு செல்வதற்குள் குழந்தை உயிரிழந்துவிடவே, தகவல் அறிந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.