காதல் திருமணம் செய்த 5 மாதத்தில்.., கணவன் - கர்ப்பிணி மனைவியாக ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய ஜோடிகள்.!

காதல் திருமணம் செய்த 5 மாதத்தில்.., கணவன் - கர்ப்பிணி மனைவியாக ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய ஜோடிகள்.!


Thiruvallur RK Pettai Love Married Young Couple Suicide

ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்த ஜோடி, 5 மாதத்திற்குள்ளாக ஒரே சேலையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, ஆர்.கே பேட்டையில் வசித்து வருபவர் வேலு. இவரின் மகள் பவித்ரா (வயது 22). இவர் ஆர்.கே பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இதே நிறுவனத்தில் ஆர்.கே பேட்டை கொண்டாபுரம் காலனியில் வசித்து வரும் சௌந்தர்ராஜன் (வயது 25) என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. 

thiruvallur

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்பால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், கணவன் - மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்று பவித்ரா மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோர் சௌந்தர்ராஜனின் வீட்டிலேயே தூக்கில் தொங்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆர்.கே பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.