பம்ப்செட்டுக்கு விளையாடச்சென்று சடலமாக வீடுதிரும்பிய சகோதரர்கள்: மின்சாரம் தாக்கி நேர்ந்த சோகம்.!Thiruvallur Ponneri 2 Died Electric Attack 

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே சோழவரம், கன்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனிசாமி. இவரின் மனைவி ஜீவா. தம்பதிக்கு விஷ்வா (வயது 12) மற்றும் சூர்யா (வயது 10) என்ற இரு மகன்கள் இருந்தனர். 

இவர்கள் இருவரும் இன்று காலை பம்ப்செட்டிற்கு விளையாட சென்ற நிலையில், அங்கிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அதனை கவனிக்காத இருவரும் கம்பியை மிதித்தனர். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.