சொந்த மகளுக்கு ஆண்டுக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்த காமுக தந்தை; தட்டிக்கேட்காத தாய்.. போக்ஸோவில் பெற்றோரை உள்ளே வைத்த மகள்.!

சொந்த மகளுக்கு ஆண்டுக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்த காமுக தந்தை; தட்டிக்கேட்காத தாய்.. போக்ஸோவில் பெற்றோரை உள்ளே வைத்த மகள்.!


thiruvallur-peravallur-girl-complaint-against-parents-p

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூரில் வசித்து வரும் 20 வயது இளம்பெண், செம்பியம் உதவி காவல் ஆணையர் பாபுவிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், "எனது 12 வயது முதலாக தந்தை என்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார். இதனை அம்மாவிடம் கூறுகையில் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினார். ஆதலால், தந்தை மற்றும் தாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். 

thiruvallur

இந்த விஷயம் தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர், மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணின் தந்தை ஸ்ரீநாத் (வயது 59), தாய் காஞ்சனா (வயது 52) ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணையில், ஸ்ரீநாத் சிறுவயதில் இருந்து மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமானது. 

thiruvallur

இதனைகவனித்த காஞ்சனாவும் கணவரை கண்டித்த நிலையில், காலப்போக்கில் கணவரின் செயல்பாடுகளை கண்டிக்கவில்லை. மேற்படி காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிய ஸ்ரீநாத் மகளிடம் அத்துமீறவே, மனமுடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது. இதனால் பெண்ணின் பெற்றோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.